அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் துணை செயலாளர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கும் மேலாக தனது தாக்குதலை நடத்தி வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை 43% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை செயலாளர் மிகைல் போபோவ் பேசியுள்ளார். அவர் பேசுகையில் “ஐரோப்பிய நாடுகளிடம் அமெரிக்கா ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விரிக்குமாறு வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை 45% அதிகரித்துள்ளது. அதாவது ரஷ்யாவிடம் இருந்து ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பீப்பாய்களில் எண்ணெயை அமெரிக்கா வாங்கி வருகிறது. மேலும் அமெரிக்க நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் உரங்களையும் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.