Categories
மாநில செய்திகள்

விவாகரத்து வழக்கு…. 10 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த தம்பதி…. ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பு….!!!!

கடந்த 1997-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு சென்னையை சேர்ந்த தம்பதியருக்கு 9 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. பின்னர் இருவரும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்துள்ளனர். இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த 2014-ல் விவாகரத்து கோரி கணவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, டி.ராஜா ஆகியோர் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி அல்லது கணவர் தரப்பில் தொடரப்பட்ட விவாகரத்து வழக்கை எதிர்த்தோ மனைவி மனு தாக்கல் செய்யவில்லை என்றும், மனைவி தனியாக பிரிந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார் என்றும், திருமண உறவு 10 வருடங்கள் பிரிந்துள்ள நிலையில் விவாகரத்து வழங்கலாம் என்று விவாதிக்கப்பட்டது.

மனைவி தரப்பில் கணவருடன் 14 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்ததாகவும் குழந்தைக்காக பல மருத்துவ சோதனைகள் மேற்கொண்டதால் நியாயமான செலவுகளை கூட சமாளிக்க முடியாமல் தவிப்பதாகவும் கூறப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கணவன்-மனைவி இருவரும் 10 வருடங்களாக சந்தோசமாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்துள்ளதை சுட்டிக்காட்டி, விவாகரத்து வழங்க மறுத்த சென்னை குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Categories

Tech |