முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடி அரசின் 8 ஆண்டுகளில் எரிபொருள் வரியாக மத்திய அரசு 26,51,919 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியாவில் சுமார் 26 கோடி குடும்பங்கள் உள்ளன. அதாவது ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் மத்திய அரசு சராசரியாக 1,00,000 ரூபாய் எரிபொருள் வரியாக வசூலித்துள்ளது.
ஒரு சராசரி குடும்பம் இவ்வளவு பெரிய தொகையை எரிபொருள் வரியாக செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது? என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.