Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அ.தி.மு.க நிர்வாகி காருக்கு தீ வைப்பு…. ஒருவர் அதிரடி கைது…. மேலும் 3 பேருக்கு வலைவீச்சு….!!

முன்னாள் அ.தி.மு.க பிரமுகரின் காரை எரித்த ஒருவரை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள காமராஜர் நகரில் வசித்து வரும் வின்சென்ட் ராஜா என்பவர் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் சசிகாலவுடன் தொலைபேசியில் பேசியதால் இவரை கட்சி பதவியில் இருந்து நீக்கியுள்ளனர். இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வின்சென்ட் ராஜாவின் காரை மர்மநபர்கள் சிலர் தீவைத்து எரித்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வின்சென்ட் ராஜா பரமக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து காரை எரித்த மர்மநபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசாரின் விசாரணையில் பரமக்குடியை சேர்ந்த சகாயம் என்பவற்றின் தூண்டுதலின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து வின்சென்ட் ராஜாவின் காரை எரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையறிந்த போலீசார் மணிகண்டனை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள ஆனந்த், சகாயம், காளீஸ்வரன் ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |