Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை…. போலீசார் அதிரடி நடவடிக்கை…. ஒருவர் கைது….!!

வீட்டில் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் ராசிங்காபுரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் அவரது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து போலீசார் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில் 1¼ கிலோ கஞ்சா இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கார்த்திகேயனை கைது செய்து கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |