Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோடை கால சீசன்…. வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு….!!

வால்பாறையில் கோடை கால சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை கால சீசன் தொடங்கியுள்ளது.இதனால்  ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர். வால்பாறையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில் நுங்கு, தர்பூசணி வியாபாரம் தற்பொழுது அதிகரித்துள்ளது. இந்தக் கோடை மழை சில நேரங்களில் கன மழையாகவும், மிதமான மழையாகவும் மாறி மாறி பெய்து வருவதால் வால்பாறை பகுதியில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இங்கு பகலில் வெயில் அடிப்பதும் இரவில் குளிர்ந்த காலநிலையும் நிலவுகிறது. இதை சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகின்றார்கள். இதை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட சுற்றுலாத் துறையினர் வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கோடைகால சுற்றுலா இடமாக டாப்சிலிப், ஆழியாறு மற்றும் வால்பாறை ஆகியவற்றை இணைப்பதற்கு சிறப்பு சுற்றுலா வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும்  என  வால்பாறை பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |