Categories
உலக செய்திகள்

கோவாக்சின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்….. செயல்திறன் குறைபாடு காரணமா…? வெளியான திடீர் தகவல்…!!!!!!

கோவாக்சின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படும் என உலக சுகாதார துறை அறிவித்துள்ளது.

ஐநா மூலம் கோவாக்சின் விநியோகம்  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு இன்று அறிவித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ள நிலையில் வசதிகளை மேம்படுத்தவும், குறைபாடுகளை சரி செய்வும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி பெற்றுக் கொண்ட நாடுகள் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

ஆனால் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை குறிப்பிடவில்லை. இது பற்றி வெளியிட்ட அறிக்கையில் 5 அமைப்புகள் மூலம் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படுவது செய்யப்பட்டிருக்கிறது. அந்த தடுப்பூசி வாங்கிய நாடுகள் தக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்கிறோம் என குறிப்பிட்டுள்ளது. மேலும் பாரத் பயோடெக் நிறுவன தடுப்பூசி செயல்திறன்மிக்கதாக  இருப்பதாகவும், பாதுகாப்பு குறைபாடு எதுவும் நடைபெறவில்லை என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

கோவாக்சின்  ஏற்றுமதி நிறுத்தம் செய்யப்படுவதால் அதன் விநியோகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.இந்நிலையில் கடந்த மார்ச் 16 முதல் 22 வரை பயோடெக் நிறுவனத்தில் அவசரகால பயன்பாட்டிற்கு பின் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என பாரத் பயோடெக் உறுதி அளித்து இருக்கிறது.

Categories

Tech |