மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்தில் செல்ல இலவச பேருந்து பயண அட்டையை கலெக்டர் வழங்கியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து 2022-2023 ஆம் ஆண்டிற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பயணிப்பதற்கு, மற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு பணிக்கு செல்ல, கல்வி பயில மற்றும் மருத்துவ சிகிச்சையின் பொருட்டு செல்ல இலவச பயண அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது.
இதில் சுமார் 125 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் பல்வகை இனத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். பின்னர் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் டாக்டர் ஆர்த்தி இலவச பேருந்து பயண அட்டைகளை வழங்கி உள்ளார்.