Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோடை வெயிலை தணிக்கும் பொருட்டு… நீர் மோர் பந்தலை திறந்து வைத்த… முன்னாள் முதலமைச்சர்…!!

வாழப்பாடி பஸ்நிலையத்தில் நீர் மோர் பந்தலை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டத்தில்  பல்வேறு இடங்களில் அ.தி.மு.க சார்பாக கோடை வெயிலை தணிக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் திட்டத்தை தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி நேற்று ஆரம்பித்து வைத்தார். இதேபோன்று வாழப்பாடி பஸ் நிலையம் அருகில் நீர் மோர் பந்தலை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் மு. க. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் நிறைவேற்றவில்லை.

அ.தி.மு.க கொண்டு வந்த அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஆகிய அனைத்தையும் தி.மு.க அரசு முடக்கியது. மேலும் கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்த தமிழக மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சாதியின் பெயரைச் சொல்லி அரசு ஊழியரை தரக்குறைவாக திமுக அமைச்சர் பேசினார். திமுக ஆட்சி தான் நாட்டிற்கே சமூகநீதிக்கு எடுத்துக்காட்டு என்று கூறுகிறார்கள். மேலும் திராவிட மாடல் ஆட்சி என்றும்  கருதுகின்றனர். இது தான் சமூக நீதியா என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |