Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“DIFFRENT AWARENESS” ஹெல்மெட் போடாதவர்களுக்கு ரோஜா பூ….. பெண்காவலர்கள் புதிய முயற்சி….!!

திருப்பத்தூரில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெண் காவலர்கள் ரோஜா பூ வழங்கி புதுமையான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வார விழாவானது தமிழகத்தில் நடைபெறும். இவ்விழாவின் போது சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான விழிப்புணர்வுகளும்  ஏற்படுத்தப்படும். அந்த வகையில் இவ்வாண்டு திருப்பத்தூரில் நடைபெற்ற விழாவில் பெண் காவல் அதிகாரிகளும், மானிய விலையில் ஸ்கூட்டர் பெற்றவர்களும் தங்களது ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன பேரணி நடத்தினர்.

இப்பேரணியானது கிருஷ்ணகிரி செல்லும் மெயின் ரோட்டில் நடந்தது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி முடிந்தபின் சாலை வழியாக ஹெல்மெட் அணியாமல் வந்த நபர்களை மறித்து தயவு செய்து ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுமாறு  அறிவுறுத்தி பெண் காவல் அதிகாரிகள் ரோஜாப்பூ வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு அப்பகுத்தி மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Categories

Tech |