பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பது வழக்கம். மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குரான் அருளப்பட்டது இந்த ரமலான் மாதத்தில் தான். ஹஜ்ஜை தவிர இறைநம்பிக்கை, நோன்பு, தொழுகை, கட்டாயக்கொடை ஆகிய நான்கு கடமைகளும் ஒன்று சேர இந்த ரமலான் மாதத்தில் தான் நிறைவேற்றப்படுகிறது.
இந்நிலையில் ரமலான் மாத பிறை நேற்று மாலை பல்வேறு இடங்களில் காணப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் ரமலான் நோன்பை முஸ்லிம்கள் கடைபிடிக்க ஆரம்பித்தனர். இதைத்தொடர்ந்து இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல், காலாடிப்பட்டி, சத்திரம், பரம்பூர், குடுமியான்மலை, வயலோகம், பெருமநாடு உள்ளிட்ட இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் பள்ளிவாசலில் இரவு நேரம் சிறப்பு தொழுகை நடந்தது.