Categories
உலக செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக…. பிரபல நாட்டில் இலங்கையர்கள் மாபெரும் போராட்டம்…!!!!

ஆஸ்திரேலியாவில்  இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சேவிற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இலங்கை அதிபர் கோட்டாபய  ராஜபக்ஷவுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்த போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை  தொடர்ந்து நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை அடுத்து நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த ஆரம்பித்த மக்கள், கடந்த 31-ஆம் தேதி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதற்கிடையில் ஏப்ரல் 2ம் தேதி  மாலை 6 மணி முதல்  ஏப்ரல் 4 அதிகாலை 6 மணி வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஏப்ரல் 2ஆம் தேதி இரவு முதல் இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் திரண்ட இலங்கையர்கள், இலங்கை அரசாங்கம் மற்றும் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். கையில் பதாகைகள் மற்றும் இலங்கை கொடியுடன் கூடிய நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் கோட்டாபய ராஜபக்ஸே   பதவி விலக வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |