நியூசிலாந்தை சேர்ந்த கேலண்டர் கேர்ள்ஸ் என்ற நிறுவனம் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் புகைப்படம் ஒன்றை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட இந்த புகைப்படம் நாடு முழுவதும் ஏற்படுத்திய கொந்தளிப்பால் சனிக்கிழமை அன்று அந்த நிறுவனத்தால் நீக்கப்பட்டது. பிரதமரை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களை பதிவிட்டு உள்ளதாக அந்நிறுவனத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிரதமரின் இந்த ஆபாச புகைப்படத்தை பார்த்த இணையதள வாசிகள் இது பிரதமரின் நற்பெயருக்கு பங்கம் விளைவிக்க கூடிய ஒரு மோசமான செயல் என குறிப்பிட்டுள்ளனர். இந்த செயலால் கேலண்டர் கேர்ள்ஸ் நிறுவனத்திடம் இருந்து 20 ஆயிரம் டாலர் வரை நஷ்ட ஈடு வாங்கப்படும் என போலீசார் தரப்பு கூறுகிறது.