Categories
மாநில செய்திகள்

ஒரே நாளில் 91,538 கி மருத்துவ கழிவுகள் அகற்றம்….!! தமிழக அரசின் செம சூப்பர் திட்டம்….!!

தமிழகத்தில் மொத்தம் 2672 அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகள் சுகாதாரமாகவும் பாதுகாப்பானதாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த பிற துறைகளுடன் இணைந்து செயல்பட மாவட்ட ஆட்சியர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக “நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் தமிழகம் முழுவதும் மொத்தமாக 5120 சுகாதார பணியாளர்கள் 2179 உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களும் சேர்ந்து மருத்துவமனைகளை சுத்தப்படுத்தி வருகின்றனர். இந்த பணியில் 91,538 கிலோ மருத்துவ கழிவுகள் ஒரே நாளில் சேகரிக்கப்பட்டு நெறிமுறைகளின்படி அகற்றப்பட்டுள்ளன.

Categories

Tech |