Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இறுதித் தேர்வு…. அந்தந்த பள்ளிகளே முடிவு எடுக்கலாம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டது. அப்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வுகள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகளை நடத்துவது குறித்து அந்தந்த பள்ளிகளே முடிவு எடுக்கலாம் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான பாட திட்டம், வினாத்தாள் வடிவமைப்பு உள்ளிட்டவைகளை முடிவு செய்து தேர்வு நடத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |