பெரு நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்த்து போராட்டம் நடந்த நிலையில், காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.
பெரு நாட்டில் விவசாய உரம், எரிபொருள் போன்ற பொருட்களின் விலை அதிகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வாகன ஓட்டுனர்கள் கடந்த திங்கட்கிழமையிலிருந்து நாடு முழுக்க பணி நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
மேலும், அதிபரையும், பிரதமரையும் எதிர்த்து விவசாயிகள் போர்க்கொடி தூக்கி சாலையில் சென்றார்கள். இந்த பேரணியின் போது, திடீரென்று மோதல் ஏற்பட்டு காவல்துறையினர் மீது பொதுமக்கள் கற்களை தூக்கி வீசினர். எனவே, காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டி அடித்துள்ளார்கள்.