தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரும் மே மாதம் ஆறாம் தேதி முதல் மே மாதம் 30-ஆம் தேதி நடைபெறும் என்றும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மே-9 ஆம் தேதி ஆரம்பமாகி மே 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி தொடங்கி மே 28 தேதி முடிவடைய உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு கிடையாது என்றும், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.