Categories
செய்திகள் மாநில செய்திகள்

தேர்வுக்கு முன்பே தேர்ச்சி… மாணவர்கள் மகிழ்ச்சி…!!

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தகவல் மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது.. 

இந்த ஆண்டு முதல் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.

இந்நிலையில் அரசு தெரிவித்திருந்தது என்னவென்றால் அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர்கள் குறைவாக எண்ணிக்கை இருந்தால் அந்த மாணவர்கள் அருகில் உள்ள 3 அல்லது 5 பள்ளிகளுடன் இணைந்து தேர்வு எழுத வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

இதனால்  5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வுக்காக ஐந்து கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் சூழல் இருந்தது. பொதுத் தேர்வு நெருங்க கூடிய வேலையில் பெற்றோர்கள் மத்தியிலும் கல்வியாளர் மத்தியிலும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு இருந்தது, ஏனென்றால் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு படிக்க கூடிய மாணவர்கள் ஒரு தேர்வுக்காக எதற்கு 5 கிலோ மீட்டர் செல்ல வேண்டும் அந்த பொதுத்தேர்வை அவர்கள் படிக்கக்கூடிய பள்ளியிலேயே எழுதலாமே அதற்கு தேவையானவற்றை அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கான சாத்தியங்கள் குறைவாக இருந்த காரணத்தால் அரசு மற்றும் பள்ளிகளில் அங்கு இருக்கக்கூடிய மாணவர்களுடன் சேர்ந்து பொதுத்தேர்வு எழுத வேண்டுமென நிர்ணயித்தது. இந்தநிலையில் மார்ச் 30ஆம் தேதி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஏப்ரல் 15ஆம் தேதி ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடக்க உள்ள நிலையில், இந்த எதிர்ப்பு கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

இந்த கோரிக்கைகளை ஏற்றும் அரசு மாணவர்களின் நலன் கருதியும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு படிக்க கூடிய மாணவர்கள் தங்கள் பயிலும் அதே பள்ளியில் பொதுத் தேர்வுகளை எழுதலாம் என்று தற்போது அறிவித்திருக்கிறது. ஒரு பள்ளியில் 5 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும்கூட அவர்கள் பயிலும் பள்ளியிலேயே தேர்வினை எழுத முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்தாலும், இந்த தேர்வு  கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. இந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவராக அனுமதிக்கப் படுவார்கள் எனவும், மூன்றாண்டுகளுக்கு பாஸ்/ பெயில் வேறுபாடுகள் பார்க்க கூடாது என்று ஏற்கனவே அரசு தெரிவித்திருந்த நிலையில் இந்த ஒரு கருத்து பெற்றோர் மற்றும் கல்வியாளர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

Categories

Tech |