இரண்டு KT1 ரக பயிற்சி விமானம் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென் கொரியா நாட்டில் விமானப்படைக்கு சொந்தமான இரண்டு KT1 ரக பயிற்சி விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இந்த பயிற்சி விமானமானது நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளனது. இந்த விபத்தில் 3 விமானிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு விமானி படுகாயமடைந்து இருப்பதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து அந்நாட்டின் விமானப்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் “சரியாக எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதை கண்டறியும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் சம்பவ இடத்தில் 3 ஹெலிகாப்டர்கள், 20 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 30 வீரர்கள் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த KT1 ரக பயிற்சி விமானத்தில் 2 பேர் மட்டுமே செல்ல முடியும் என்பதால் விபத்தில் நான்கு பேர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.