பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 14 வயது மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை 14 வயது மாணவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் தாயார் சிவகங்கையிலுள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அந்த 14 வயது மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.