காவல் நிலையத்தின் முன்பு வாலிபர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் சுதாகர்-சுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுதா தனது சகோதரர் பிரசாந்த் என்பவரிடமிருந்து சுதாகரின் மருத்துவ செலவிற்காக பணம் வாங்கியுள்ளார். இதனையடுத்து பிரசாந்த் தான் கொடுத்த பணத்தை கேட்டு சுதாகரிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து சுதாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த சுதாகர் காவல் நிலையம் முன்பு உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீ குளித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சுதாகரை காவல்துறையினர் மீட்டு சிகிக்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.