மூலப்பொருட்கள் மற்றும் பண்டங்களின் விலை உயர்வால் தீப்பெட்டி தொழிற்சாலைகளை வரும் 6ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை மூட உள்ளதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் 5 லட்சம் தொழிலாளர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டி தயாரிப்புக்கு தேவையான பாஸ்பரஸ், குளோரைடு, மெழுகு, அட்டை, பேப்பர் ஆகியவற்றின் தொடர் விலை உயர்வை இதற்கு காரணம் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அடுத்தடுத்து பிற உயர்வால் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளில் பயன்படுத்தும் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்து விலை உயர்வு அறிவிப்பு வெளியாகி கொண்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
ஏப்ரல் 6 முதல் 17ஆம் தேதி வரை…. மூடப்படும் தீப்பெட்டி ஆலைகள்….. 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்….!!!!
