போக்சோ சட்ட பிரிவு வழக்குகளை திறமையுடன் மேற்கொள்வதற்காக பெண் காவல் அதிகாரிகளுக்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
போக்சோ சட்ட பிரிவு வழக்குகளை விசாரணை அதிகாரிகள் மேலும் திறமையுடன் புலனாய்வு மேற்கொள்ள பெண் காவல் அதிகாரிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாமினை சென்னை பெருநகர காவல் ஆணையர் துவக்கி வைத்துள்ளார். சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் போக்சோ சட்ட பிரிவு பதிவு செய்யப்படும் வழக்குகளில் சிறப்புடன் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் வழக்குகளில் தொய்வு ஏற்படாத வண்ணம் மேலும் திறம்பட புலனாய்வு மேற்கொள்ளவும், பெண் காவல் அதிகாரிகளுக்கு ஒருநாள் பயிற்சி முகாமினை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று காவல் ஆணையகரத்தில் துவக்கி வைத்துள்ளார்.
இந்த பயிற்சி முகாமில் லிங்கேஸ்வரன், இயக்குனர், தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாதமி, ரிஷிகோஷல், துணை இயக்குனர், மாநில நீதித்துறை அகாடமி, ஆதிலட்சுமி லோகநாதன், வழக்கறிஞர் ,உயர்நீதிமன்றம், இ.வி சந்துரு(எ) சந்திரசேகரன், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம் போன்றோர் கலந்து கொண்டு போக்சோ சட்ட பிரிவுகள் குறித்த விளக்கங்கள் விசாரணை அதிகாரிகள் போக்சோ சட்ட பிரிவு வழக்கங்களின் போது கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல்கள் பற்றியும், நெறிமுறைகள் பற்றியும், புலனாய்வு மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்ட சிறுகளை கையாளுதல், அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுதல் உட்பட இவ்வழக்குகள் புலனாய்வு முறை குறித்து பயிற்சி அளித்து காவல் அதிகாரிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். இம்முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்கள்,பெண் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலர்கள் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.