Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN : திருப்பத்தூரில் வேன் கவிழ்ந்த விபத்து…. பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு…. பெரும் சோகம்….!!!

திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு மலை பகுதியில் மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலை புதூர் நாடு அருகே மினிவேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருவிழாவிற்கு அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற போது இந்த சம்பவம் அரங்கேறி உள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர்களில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |