Categories
உலக செய்திகள்

இதுவே முதல்முறை…. பிரபல நாட்டிற்கு சென்றுள்ள இந்திய ஜனாதிபதி…. வெளியான முக்கிய தகவல்….!!!!

நேற்று மூன்று நாள் அரசு முறை பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துர்க்மெனிஸ்தான் நாட்டுக்கு சென்றுள்ளார். முதல்முறையாக இந்திய ஜனாதிபதி ஒருவர் துர்க்மெனிஸ்தான் சுதந்திரம் பெற்ற பிறகு அங்கு செல்கிறார். இந்த பயணத்தின் போது ராம்நாத் கோவிந்த் அந்நாட்டு அதிபர் செர்டர் பெர்டிமுகாமெடோவை சந்தித்து இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

இந்த நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி சஞ்சய் வர்மா, இந்த பேச்சுவார்த்தையின் போது ஆப்கானிஸ்தான் பிரச்சனையும் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ஜனாதிபதி 4ஆம் தேதி நான்கு நாள் பயணமாக நெதர்லாந்து நாட்டுக்கு செல்ல இருக்கிறார்.

Categories

Tech |