நெல்சன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்த படத்தில் யோகிபாபு, பூஜா ஹெக்டே, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் அனிருத் இசையில் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு எப்போது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஆடியோ வெளியீடு இல்லை என்ற செய்தி வெளியாகி உள்ளது.
ஆனாலும் ஆடியோ வெளியீட்டுக்கு பதிலாக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும், இந்த படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது தகவல் வெளியாகி உள்ளது, மேலும் இந்த நிகழ்ச்சியை இயக்குனர் நெல்சன் தொகுத்து வழங்கியுள்ளாராம், இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏனென்றால் நெல்சன் மிகவும் குறும்புக்காரர், விஜய்யும் அப்படிப்பட்டவர்தான். இந்நிலையில் இருவரும் இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளதால் பொழுதுபோக்கிற்கு பஞ்சமிருக்காது என்று தோன்றுகிறது.