Categories
அரசியல்

முதலமைச்சர் துடிப்புடன் இருக்கிறார்…. “போராட்டத்திற்கு தேவை இருக்காது”…. ராமதாஸ் பேச்சு….!!!

10.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் துடிப்புடன் இருக்கிறார். போராட்டத்திற்கு தேவை இருக்காது என்று பாமக செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:  “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை ரத்துசெய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது ஏமாற்றம் அளிக்கின்றது. ஆனாலும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லாது என்பதற்காக சென்னை ஐகோர்ட் பட்டியலில் உள்ள காரணங்களை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து இருப்பது மனநிறைவு அளிக்கிறது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்று தெரிவித்த போதிலும், அதையும் கடந்து பல சாதகமான அம்சங்கள் இருந்தது.

வன்னியர்களுக்கு எதிர்காலத்தில் கூட இந்த ஒதுக்கீடு கிடைக்காது என்ற வகையில் மதுரை கிளை ஏற்படுத்தியிருந்த முட்டுக்கட்டைகளை இந்த தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் அகற்றப்பட்டுள்ளன. தமிழக அரசு நினைத்தால் தெளிவான புள்ளி விவரங்களின் அடிப்படையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான பரிந்துரை அறிக்கையை பிற்படுத்தப்பட்ட ஆணையத்திடம் இருந்து பெற்று வழங்கலாம். அந்த வகையில் இது சாதகமான தீர்ப்பு. இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை நான் ஓய மாட்டேன். இட ஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக மீண்டும் நிறைவேற்றுவதற்கான அனைத்து வேலைகளையும் பாமக செய்யும். மேலும் தமிழக அரசுக்கு இதுதொடர்பாக பாமக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்.  10.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் துடிப்புடன் இருக்கிறார். போராட்டத்திற்கு தேவை இருக்காது” என்று பாமக செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசியுள்ளார்.

Categories

Tech |