வாலிபரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்னபுதூரில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாதன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் லோகநாதன் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது ஒரு மர்ம நபர் லோகநாதனின் கையிலிருந்த செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இது குறித்து லோகநாதன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போன் பறித்த குற்றத்திற்காக குணசேகரன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை மீட்டனர்.