குறைந்த விலையில் ரெனால்ட் கிகர் என்ற கார் களமிறங்க உள்ளது. இந்த காருக்கு கிலோபல் அமைப்பு 4 ஸ்டார் மதிப்பீட்டை வழங்கியுள்ளது.
2022ஆம் ஆண்டு ரெனால்ட் இந்திய நிறுவனம் புதிய ரெனால்ட் கிகர் காரை அறிமுகம் செய்தது. இந்த ஆண்டில் ரெனால்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் மூன்றாவது கார் இதுவாகும். இந்தக் கருப்பு நிறத்திலான டாப் ரூப்பைக் கொண்ட இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கம்பீரமான தோற்றம் மற்றும் அசத்தலான அம்சங்களை கொண்டு இந்த கார் அறிமுகமாக உள்ளது.
இந்த காரில் மல்டி டிரைவிங் மோடுகள் மற்றும் PM2.5 அட்வான்ஸ்டு அட்மாஸ்பியர் ஃபில்டர் போன்ற அம்சங்கள் உள்ளன. வயர்லெஸ் சார்ஜிங், குரூஸ் கன்ட்ரோல் மற்றும் மற்றும் 60/40 ஸ்பிலிட் ரியர் சீட் உடன் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் உள்ளது. மேலும் இந்த புதிய ரெனால்ட் கார் இரண்டு எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றது. முதலாவது , 1.0-லிட்டர் எனர்ஜி இன்ஜின் மேனுவல் மற்றும் ஈஸி-ஆர் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன், மற்றொரு இன்ஜின் மேனுவல் மற்றும் எக்ஸ்-டிரானிக் சிவிடி டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. 1 ஒரு லிட்டர் பெட்ரோலில் இந்த கார் 20 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என்று கூறப்படுகின்றது. இந்த காரின் ஆரம்ப விலை 5.4 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.