ஹரியானாவில் அறிவுபூர்வமாக செயல்பட்ட சிறுவனுக்கு போலீஸார்ரூ.3 ஆயிரம் ரொக்க தொகை பரிசாக வழங்கியுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில் கய்த்தால் என்ன மாவட்டத்தை சேர்ந்தவர் சவீதா தேவி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதேபோல் நேற்று இரவும் தம்பதிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. இதனால் சவீதா விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். இதனையடுத்து இன்று காலை தனது எட்டு வயது மகன் ராகுலை வீட்டுக்கு வெளியே சென்று விளையாடுமாறு அவர் கூறியுள்ளார்.
அந்த சிறுவனும் வீட்டிற்கு வெளியே சென்ற விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தற்செயலாக வீட்டின் பின்புறமுள்ள ஜன்னல் வழியாக பார்த்தபோது தனது தாயார் தூக்கிடுவதற்காக சேலையை மின்விசிறியில் கட்டிக் கொண்டு இருப்பதை பார்த்து கூச்சலிட்டு உள்ளார். ஆனால் அக்கம்பக்கத்தில் வீடு எதுவும் இல்லாததால் அவரது கூச்சல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. இதனையடுத்து புத்திசாலித்தனமாக யோசித்த சிறுவன் ராகுல் தனது கையிலிருந்த செல்போனில் அவசர உதவி எண் 112 அமைத்துள்ளார்.
அப்போது மறுமுனையில் பேசிய போலீஸாரிடம் இந்த விபரங்களை கூறியுள்ளார். இதன் பெயரில் போலீஸார் வெறும் எட்டு நிமிடங்களுக்குள் சிறுவனின் வீட்டிற்கு சென்று கதவை உடைத்து சவீதா தேவியை காப்பாற்றியுள்ளனர். பின்னர் அறிவுபூர்வமாக செயல்பட்ட இந்த சிறுவனுக்கு போலீசார் ரூ.3000 நோக்கத்தை பரிசாக வழங்கியுள்ளார். ஏதேனும் ஆபத்து என்றால் 112 அழைக்க வேண்டும் என தனது பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக ராகுல் கூறியுள்ளார்.