Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விடுதிக்கு வெளியே நின்ற மர்ம நபர்…. அச்சத்தில் மாணவிகள்…. வைரலாகும் வீடியோ…!!

பல்கலைக்கழக விடுதிக்கு வெளியே நின்று மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் தங்கும் விடுதியில் மர்ம அவர்களின் நடமாட்டம் இருப்பதாக பல்வேறு புகார்கள் வந்தது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்பு மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் பேச்சுவார்த்தை நடத்தி உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்த பிறகு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் விடுதிக்கு வெளியே கத்தியுடன் நின்று கொண்டு மிரட்டுவது போன்ற வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இது மாணவிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |