Categories
தேசிய செய்திகள்

ரூ 21,000 கோடி நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும்…!! நிதி அமைச்சருக்கு முதல்வர் கோரிக்கை….!!

டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்தார். இதனைத்தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூபாய் 21 ஆயிரம் கோடி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகை ரூ.13,504 கோடி உட்பட ரூ.20 ஆயிரத்து 860 கோடியே 40 லட்சத்தை உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஜூன் மாதத்துடன் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை முடிவடைய உள்ள நிலையில் அதற்கான கால அவகாசத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதோடு 14வது நிதிக்குழு உள்ளாட்சி அமைப்புகளுக்கு பரிந்துரைத்த மானியம் மற்றும் எஞ்சிய செயல்பாட்டிற்கான மானியம் உட்பட 548 கோடியே 76 லட்சத்தையும், செயல்பாட்டு மானியம் ரூ.2 ஆயிரத்து 29 கோடியே 22 லட்சத்தையும் தமிழகத்திற்கு விரைந்து வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

Categories

Tech |