சென்னையில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் வொர்க் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “.வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10.5% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனினும் உயர்நீதிமன்றம் எழுப்பிய ஆறு ஏழு கேள்விகள் தவறானவை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
சிலர் சொல்வது போல அதிமுக கொண்டு வந்த உள்ஒதுக்கீடு திட்டம் அவசரகதியில் கொண்டு வந்தது அல்ல. அது பல காலம் கோரிக்கையாக முன் வைக்கப்பட்டு பின்னர் பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு கொண்டுவரப்பட்டது. தமிழக அரசு அனுப்பி வைத்த நீட்டுக்கு எதிரான மசோதாவை ஆளுநர் கவர்னருக்கு அனுப்பி வைக்காதது வருத்தமளிக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள பெண் திமுக கவுன்சிலர்கள் விவகாரங்களில் அவரது குடும்பத்தினர் தலையிடுவதை திமுக தலைவர் தடுத்து நிறுத்த வேண்டும். சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அனைவருக்கும் இலவசமாக பேருந்து பயணம் வழங்கப்பட வேண்டும். அது மட்டுமல்லாமல் 8000 புதிய பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.!” இவ்வாறு அவர் கூறினார்.