Categories
மாநில செய்திகள்

தாறுமாறாக உயர்ந்த டீ, காபி விலை…. அதிர்ச்சியில் டீ, காபி பிரியர்கள்….!!!!

தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து வணிக சிலிண்டர் விலை நேற்று ரூபாய் 200க்கு மேல் உயர்ந்தது. இதனால் ஓட்டல், டீ கடைகளில் உணவு பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் டீ ,காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த டீ ரூபாய் 12 ரூபாய்க்கும், 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த காபி 13 மற்றும் 15 ரூபாய்க்கும், ஒரு சில இடங்களில் 18 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது.

அதேபோல் 25 ரூபாய்க்கு வழங்கப்பட்ட பார்சல் டீ, காபி விலை பத்து ரூபாய் உயர்த்தப்பட்டு 35 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் டீ கடைகளில் திடீரென்று டீ, காபி விலை  உயர்த்தப்பட்டுள்ளதால் தினமும் 5, 6 டீ குடிக்கும் டீ பிரியர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |