உக்ரைனுக்கு ரூபாய் 2,250 கோடி மதிப்பிலான ராணுவ உபகரணங்கள் வழங்க அமெரிக்கா அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை சமாளித்த பதில் தாக்குதல் நடத்தவும் உக்ரைனின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தவும் இந்த உபகரணங்களை வழங்க உள்ளதாக கூறியுள்ளார்.
அமெரிக்கா வழங்க உள்ள இந்த உபகரணங்களின் வரிசையில் லேசர் ராக்கெட், இருளிலும் குறிபார்த்து தாக்க உதவும் கருவிகள், ட்ரோன்கள் தளவாட உதிரி பாகங்கள், வெடி மருந்துகள், போன்றவை இடம் பெற்றுள்ளன. அமெரிக்கா ஏற்கனவே உக்ரைனுக்கு 106 கோடி ரூபாய் மதிப்புள்ள உபகரணங்களை வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.