பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குருப்-2 நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு குரூப்-2 நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் மகேந்திர முருகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் படி துணை வட்டாட்சியர் பட்டியல்களை மறுஆய்வு செய்து திருந்திய துணை வட்டாட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் மாநில பொது செயலாளர் தர்மராஜ், பொருளாளர் மெகரலி, சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.