Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எல்லாம் முடிந்துவிட்டது” கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் பெருமாள் ஈஸ்வரன் கோவில் தெருவில் டெய்லரான கமல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாட்சாயினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு பவதாரிணி என்ற மகளும், பவன்கல்யாண் என்ற மகனும் உள்ளனர். இதில் பவதாரணி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தாட்சாயினி இறந்துவிட்டார்.

இந்நிலையில் பவதாரணி தனது தம்பியுடன் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பிறகு பவன்கல்யாண் டியூஷனுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கமல்ராஜ் தனது மகள் தூக்கில் சடலமாகக் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் காவல்துறையினர் பவதாரணி எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அந்தக் கடிதத்தை “எல்லாம் முடிந்துவிட்டது” என எழுதப்பட்டிருந்தது. எனவே தாய் இறந்த துக்கத்தில் பவதாரணி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |