மராட்டியர்களின் புத்தாண்டான குடிபட்வா இன்று (ஏப்ரல்.2) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மற்றும் நாளை மும்பைமாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி மையங்களானது இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், இன்று (ஏப்ரல்.2) கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டு இருக்கும்.
இதேபோன்று வாரவிடுமுறை நாள் என்பதால் நாளையும் (ஏப்ரல் 3) மும்பையிலுள்ள அரசு மற்றும் மாநகராட்சி தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டு இருக்கும். இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணி வருகிற திங்கட்கிழமை (4ஆம் தேதி) தொடங்கும். ஆகவே பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க கேட்டு கொள்கிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது