பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அதன் மீது வரும் 3ஆம் தேதி(நாளை) வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இதில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லையெனில் இம்ரான் கான் அரசு கவிழும். இம்ரான் கான் இப்போது தன் அரசியல் வாழ்க்கையின் முக்கிய காலக் கட்டத்தில் இருக்கிறார். அவரது கூட்டணிக்கட்சிகள் இரண்டும் தங்களது ஆதரவை திரும்ப பெற்று எதிர்க்கட்சி வரிசையில் சேர்ந்துவிட்டன. இந்நிலையில் இம்ரான்கானின் முன்னாள் மனைவியான ரெஹாம் கான் அவரை விமர்சித்து இருக்கிறார்.
இது தொடர்பாக இந்தியா டுடே செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் ரெஹாம் கான் கூறியிருப்பதாவது, “இம்ரான்கான் ஒரு ஏமாற்றுக்காரர். அவர் அறிவுரைகளுக்கு செவிசாய்ப்பதில்லை. அவர் அறிவுரைக்கு செவிசாய்த்து இருந்தால் ஒரு வேளை நான் இதுவரை அவருடன் இருந்து இருப்பேன். ஒரு வேளை மற்றவர்கள் அவரைவிட்டு விலகி இருக்க மாட்டார்கள். இதில் இம்ரான் கான் முகஸ்துதி மற்றும் பாராட்டுக்களை மட்டுமே கேட்க விரும்பும் ஒரு பிரபலம் ஆவார்.
அவர் கைதட்டல்களைக் கேட்கவேண்டும் அவர் தன் பெயர் ஓங்கி ஒலிப்பதை கேட்கவேண்டும். தன் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி ஒருபெரிய சர்வதேச சதியின் ஒருபகுதி என்று இம்ரான் கான் சொல்வது அவர் கட்டும் கதை ஆகும். இது ஒரு பி கிரேடு படத்தின் கதைக்களத்தை போல் என்று தெரிவித்தார். இதனிடையில் ரெஹாம்கான் ஒரு ட்விட்டல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இம்ரான்கான் பிரதமராக இல்லாத சமயத்தில் பாகிஸ்தான்நாடு சிறந்து விளங்கியது. அந்நாட்டு பிரதமராகும் அளவிற்கு இம்ரான்கானிடம் உளவுத் துறை திறமை உள்ளிட்ட வேறு எந்த திறனுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.