ஆறுமுகநேரிபேரூராட்சி தலைவர் கவுன்சிலர்களுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கியுள்ளார்.
திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பேரூராட்சியில் 17வது வார்டு கவுன்சிலர்களுக்கு ஸ்கூட்டர் மற்றும் அதற்கு மாதம் 10 லிட்டர் பெட்ரோல் அந்த பேரூராட்சி தலைவர் காலாவதி கல்யாணசுந்தரம் இலவசமாக வழங்கி இருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சியில் 18 வார்டுகள் இருக்கிறது. இந்த பேரூராட்சியில் உள்ள கவுன்சிலர்கள் தினமும் தங்கள் வாதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து அதனை உடனடியாக சரி செய்து கொடுப்பதற்கு வசதியாக ஆறுமுகனேரி பேரூராட்சி தலைவர் கல்யாணசுந்தரம் புதிய வசதியை தன் சொந்த செலவில் ஏற்படுத்தியுள்ளார்.
அதாவது பதினேழு வார்டு கவுன்சிலர்களும் இதனால் ஸ்கூட்டர் வாங்கிக் கொடுக்க முடிவு செய்துள்ளார். அதன்படி தன் சொந்த செலவில் 17 கவுன்சிலர்களுக்கும் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி ஆறுமுகனேரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு 17வது கவுன்சிலர்களுக்கும் ஸ்கூட்டரை வழங்கியுள்ளார். மேலும் வார்டு கவுன்சிலர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக மாதம்தோறும் 10 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் எனவும் பேரூராட்சி தலைவர் காலாவதி கல்யாணசுந்தரம் கூறியுள்ளார். இதனால் கவுன்சிலர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.