Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு… பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் வெளியிட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை உள்ள நாட்களில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாக ஊழியர்கள் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்துதல், 7 வது ஊதியக்குழுவில் படி  பரிந்துரைப்படி 2014 ஆம் ஆண்டு முதல் இருபத்தி ஒரு மாத சம்பள உயர்வு நிலுவைத் தொகையை வழங்குதல், சிறப்பு காலமுறை ஊதியம் தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்றவற்றை வழங்குவது நிறுத்தி வைத்து அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட கால ஒரே ஊதியம் வழங்குதல் வேண்டும், மத்திய அரசில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு இணையான சம்பளத்தை மாநில அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி 9 நாட்கள் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு இருந்தது.

ஆனால் 2003ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்காமல் பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கும் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை திறந்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் அரசு ஊழியர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக வைத்து வருகின்றார்கள். மேலும் இதற்கு தமிழகத்தில் உள்ள பல கட்சிகளின் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தற்கான காரணங்கள் விரைவில் தெரிவிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டிருக்கிறார். மேற்காணும் விவரங்கள் கோவை, மதுரை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, திருப்பத்தூர் மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் இன்னும் வரவில்லை. மேலும் இனியும் காலம் தாழ்த்தாமல் அரசுக்கு விரைவாக அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |