மிதுன ராசி அன்பர்களே…!!! இன்று பொது பிரச்சினையில் எந்தவித கருத்துக்களையும் சொல்லாதீர்கள். தொழில் வியாபாரத்தில் இலக்கை அடைய கூடுதலாக பணிபுரிவீர்கள். புதிய இனங்களில் செலவு கொஞ்சம் அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றவும். இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள், குடும்ப வருமானம் அதிகரிக்கும். எதிலும் ஆக்கப்பூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள்.
மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். இன்று மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும், பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும், வெற்றிக்கு உதவும். தொழில் வியாபாரத்தில் பழைய பாக்கிகள் இன்று வசூல் ஆகும். இன்றைய நாள் மனம் மகிழ்ச்சியாக தான் இருக்கும். உடலில் வசீகரத் தன்மை கூடும் . திருமண முயற்சிகள் வெற்றியை கொடுப்பதாக இருக்கும்.
இன்று முக்கிய பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்குமே. அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை மற்றும் இளம் மஞ்சள்