கொரோனா நோய் பரவலால் மகாராஷ்டிரா கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக மும்பை நகரில் தொற்று பரவலானது அதிகரித்து, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதை அடுத்து, மகராஷ்டிராவில் தற்போது வரை 939 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை அடுத்து முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், அமைச்சரவை கூட்டமானது நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து மாநில சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் டோபி கூறியுள்ளதாவது, மராட்டிய புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் புத்தாண்டு தினமான இன்றிலிருந்து கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளபடுவதாக அறிவித்துள்ளது. ஆனால் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும் அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் அணிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.