தன்னை ஏமாற்றிய காதலரை வித்தியாசமான முறையில் பழிதீர்த்த காதலி குறித்த தொகுப்பு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அப்படி அந்த காதலி என்னதான் செய்தார்.? முழுமையாக தெரிந்து கொள்வோம். தான் ஆசையாக காதலித்த காதலன் தன்னை ஏமாற்றியதை அறிந்த காதலி ஒருவர் காதலரின் வீட்டிற்கு சென்று ஏதாவது ஒரு விலை உயர்ந்த பொருளை சேதம் செய்ய வேண்டுமென தேடியுள்ளார். அந்த நேரத்தில் காதலரின் வீட்டில் இருந்த மேசை டிராயரில் அவருடைய பிறப்புச்சான்றிதழ் இருந்ததை கண்டறிந்த காதலி அதனை வேகமாகக் கிழித்து எறிந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இப்படி ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு எந்த ஆதாரமும் இங்கு இல்லை என எழுதி வைத்துவிட்டு வந்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து குறித்து பலரும் தங்களுடைய கருத்துக்களை கமெண்டில் பதிவிட்டுள்ளனர். அதில் ஒருவர் நீங்கள் இவ்வாறு செய்ததால் உன்னுடைய காதலருக்கு எந்த நஷ்டமும் ஆகப் போவது இல்லை. சிறிது நேரம் வரிசையில் நின்றால் புதிய பிறப்பு சான்றிதழ் கிடைத்துவிடும் என பதிவிட்டுள்ளார். மற்றொருவர் நீங்கள் பழிவாங்கியது மிகவும் வேடிக்கையாக இருந்தது என்னை சிரிக்க வைத்ததற்கு மிக்க நன்றி என பதிவிட்டுள்ளார்.