Categories
அரசியல்

மக்கள் கஷ்டப்படுறாங்க!…. உடனே இதை திரும்ப பெறுங்க…. விஜயகாந்த் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை….!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிலிண்டர், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் நாடு முழுவதும் மக்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சுங்க கட்டணத்தையும் மத்திய அரசு ரூபாய் 40 முதல் ரூபாய் 240 வரை அதிகரித்து, மேன்மேலும் மக்கள் மீது சுமையை ஏற்றுவதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பழம், பூ, பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை எடுத்துச் செல்லும் வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரம் சுங்க கட்டணம் உயர்வால் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இதனால் வாடகை வாகனங்களின் உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் பலமடங்கு அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் மக்கள் விலை உயர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம். இதற்காகத்தான் மக்கள் மாநில, மத்திய அரசுகளை தேர்வு செய்துள்ளார்களா ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதோடு, சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |