டெல்லி அரசு பள்ளிகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் பார்வையிடுவது பெருமையாக உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து இன்று டெல்லியில் உள்ள மாதிரி பள்ளிகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் பார்வையிட்டார். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்” டெல்லி நகரில் உள்ள ராஜ் கியா சர்வோதயா மாதிரி பள்ளிகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் பார்வையிட்டது பெருமையாக உள்ளது.
மேலும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள அரசு மொஹலா கிளினிகையும் பார்வையிட்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடன் அவர் கலந்துரையாடினார். கல்வியின் முன்னோடி மாநிலத்தின் முதல்வர் டெல்லி அரசு பள்ளிகளை பார்வையிட்டது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.