Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஐஸ்வர்யா போட்ட இன்ஸ்டா பதிவு”… குவிந்து வரும் கருத்துக்கள்…!!!

ஐஸ்வர்யா பகிர்ந்த இன்ஸ்டா பதிவிற்கு பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிந்த நிலையில் இருவரும் அவர்களின்  கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்களின் பிரிவை அறிந்த பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் சேர்த்து வைக்க பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் முயற்சி இதுவரையில் எந்த பலனையும் தரவில்லை. ஐஸ்வர்யா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் தற்போது பகிர்ந்த பதிவானது பாசிட்டிவான கமெண்டுகளை தெரிவித்து வந்தாலும் சில விமர்சனங்கள் எழுந்திருக்கின்றது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து, “என்ன நடந்தாலும் ஒர்க்கவுட் செய்வதை மட்டும் விட்டுவிடாதீர்கள்” என்பதுபோல் பதிவிட்டிருக்கிறார். இதைப்பார்த்தவர்களோ ஐஸ்வர்யா தான் மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்டிக் கொள்வதற்காக இது போன்ற பதிவுகளை பகிர்ந்து வருகின்றார் என கூறி வருகின்றனர். சிலரோ ஐஸ்வர்யா நடந்ததை எல்லாம் மறந்து வாழ்க்கையை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வதற்கு வாழ்த்துக்கள் எனவும் கூறி வருகின்றனர்.

Categories

Tech |