விமான எரிபொருள் விலை வெள்ளிக்கிழமை அன்று இரண்டு சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் தொடர்ந்து ஏழாவது முறையாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை காணாத விலை உயர்வாகவும் இது அமைந்துள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையே நடைபெற்ற போர் காரணமாக விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தில்லியில் ஒரு லிட்டர் விமான எரிபொருள் விலை தற்போது 112.92 உயர்த்தப்பட்டுள்ளது.
விமான எரிபொருள் கடந்த ஜனவரி மாதம் லிட்டருக்கு ரூபாய் 76.1 காசுகளாக இருந்த நிலையில் தற்போது மார்ச் மாதம் லிட்டருக்கு 110.7 காசுகளாக அதிகரித்துள்ளது. அது இன்று ரூபாய் 112.9 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் விமான எரிபொருள் விலை நிர்ணயிக்க படுவது வழக்கம் ஆகும். எரிபொருள் விலை உயர்வு விமான போக்குவரத்து துறை பொருளாதாரத்தை பாதிக்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் கடந்த வாரம் தெரிவித்துள்ள நிலையில் இன்று இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான கட்டணத்தில் 40 சதவிகிதம் விமான எரிபொருள்களுக்காக வசூலிக்கப்படுகிறது. இதனால் விமான எரிபொருள் விலை விமான போக்குவரத்தில் வருவாயை கடுமையாக பாதிக்கும் என கூறப்பட்டுள்ளது.