Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ராஜமௌலி மீது கோபமாக உள்ள ஆலியா பட்”… இன்ஸ்டா பதிவின் மூலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி…!!!!

ராஜமௌலி மீது ஆலியா பட் கோபமாக இருப்பதாக பரவி வந்த செய்தி தற்போது வதந்தி என தெரியவந்துள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய்தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடிப்பில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இத்திரைப்படத்தில் ஆலியா பட்டின் சீன்கள் சில நிமிடங்கள் மட்டுமே இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்  ராஜமௌலி மீது ஆலியா பட் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதனை வலுப்படுத்தும் வகையில் சமீபத்தில் ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஆர் ஆர் ஆர் படம் தொடர்பான பதிவுகளை நீக்கினார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆலியா பட் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவின் மூலம் கூறியுள்ளதாவது, இன்ஸ்டாகிராமில் தற்செயலாக நடக்கும் விஷயங்களை வைத்து யாரும் வதந்தியைப் பரப்ப வேண்டாம் எனவும் ராஜமௌலி இயக்கத்தில் நான் நடித்தது எனக்கு சந்தோஷம் எனவும் திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு காட்சியும் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். இத்திரைப்படத்தை பற்றியும் இந்த படத்தில் எனது அனுபவத்தை பற்றியும் வெளிவரும் செய்திகள் அனைத்தையும் மறுக்கிறேன் என கூறியுள்ளார். இதன் மூலம் பரவி வந்த வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் ஆலியா பட்.

Categories

Tech |