இந்தியாவில் உள்ள சாமானிய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் “கொரோனா கவாச்”என்ற சிறப்பு கொரோனா பாலிசி திட்டத்தை அடுத்த ஆறு மாதங்களுக்கு நீட்டித்து அறிவித்துள்ளது. இந்த பாலிசியில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் இணைந்து பயன்பெறலாம். இதற்கு முன்னதாக 2022ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா பிரச்சனை வந்ததால் பொது மக்களை காப்பதற்காக இந்த இன்ஷூரன்ஸ் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில் மீண்டும் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு இன்சூரன்ஸ் பாலிசி ஆனது கொரோனா பாதிப்பின் போது ஏற்படும் நோய் தொடர்பான செலவுகளை மிகக் குறைந்த பிரீமியத்தில் ஈடு செய்கின்றது. இந்தப் பாலிசியை கருணா காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் வாங்கியுள்ளனர். இந்த பாலிசி எடுத்தால் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகு உங்களுடைய சிகிச்சைக்கான அனைத்து வகை மருத்துவச் செலவுகளுக்கும் முழு காப்பீடு கிடைக்கும்.
இதில் குறைந்தபட்சம் 50,000 முதல் அதிகபட்சம் 5 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகை உங்களுக்கு கிடைக்கும். இதற்கான பிரீமியம் தொகை 1,000 ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். இதனை வாங்குவோரின் வயது 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். பாலிசி எடுத்த தேதியிலிருந்து 15 நாட்களுக்கு பிறகு இது நடைமுறைக்கு வரும். அதன் பிறகுதான் காப்பீட்டின் பலன்களை நீங்கள் பெற முடியும்.